தவெகவுடன் கூட்டணி சேர முதல் ஆளாக பேச்சு நடத்திய அமமுக! TTV Dhinakaran | AMMK | Vijay | TVK | Allicnc
அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு போட்டியாக, நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும், தேர்தல் பணிகளை துவங்கி விட்டது. ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை பிரசாரம் நடத்துகிறார். இதற்கிடையில், சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது. கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டில் அறிவித்தபடி, கூட்டணியில் இணையும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து த.வெ.க. கூட்டணியில் சேர முதல் ஆளாக தினகரன் முன் வந்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த அ.ம.மு.க.வை, தற்போது அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ. அமைத்திருக்கும் கூட்டணியிலும் வைத்துக் கொள்வர் என தினகரன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பா.ஜ. தரப்பிலும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதால், தே.ஜ. கூட்டணியில் இருந்து, விலகுவதாக அறிவித்தார் தினகரன். இந்நிலையில் வரும் ச ட்டசபைத் தேர்தலுக்கு விஜயுடன் கூட்டணி சேர தினகரன் பேச்சு நடத்தி வருகிறார். அ.ம.மு.க. தரப்பில் 60 தொகுதிகள் கேட்கப்பட்டதுடன், தேர்தல் செலவு குறித்தும் பேசப்பட்டுள்ளது. த.வெ.க. தரப்பில், தென் மாவட்டங்களில், 25 தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இரு தரப்பிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதும், விஜய் - தினகரன் சந்திப்பு நடக்கும் என, த.வெ.க. தரப்பில் கூறப்படுகிறது. #TTVDhinakaran #AMMK #Vijay #TVK #Alliance #PoliticalUpdates #TamilNaduPolitics #Election2023 #TAMILPolitics #PoliticalAlliance #DhinakaranEffect #VijaySupporters #AMMKLeadership #TVKStrategies #TamilPolitics #Campaign2023 #TamilNaduNews #PartyAlliance #PoliticalInsights