அன்புமணியை நீக்கினால் பாமகவில் என்ன நடக்கும்? | Anbumani | PMK | Ramadoss | PMK Meeting | 2026
சென்ற ஆண்டு டிசம்பரில் பாமக பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. எட்டு மாதங்கள் கடந்தும் இருவரும் சமாதானமாகவில்லை. அன்புமணிக்கு ஆதரவளிக்கும் மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரின் பதவியை ராமதாஸ் பறித்தார். அன்புமணி ஆதரவாளர்களாக செயல்படுகின்றனர் என எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார். ஆனால் மகன் அன்புமணி மீது மட்டும் ராமதாஸ் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஜூலை 8ல் ஓமந்துாரில் பாமக செயற்குழுவை ராமதாஸ் கூட்டினார், அதில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல விமர்சனத்தோடு நிறுத்திக் கொண்டார்.