வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரொம்ப சந்தோஷம்! இந்த மாதிரி எல்லா அரசியல் தலைவர்களும் பேசாமல் இருந்தால் மக்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்! சின்ன மாங்கா மௌனம் தொடரட்டும்! ஒரு சந்தேகம்! இவர் பின்னால் நடந்து செல்ல எங்கே ஆள் பிடிக்கிறார்?
100 நாள் நடைபயணத்தில் இனி இப்படித்தான் | Anbumani | PMK | Silent fast | Ramadoss| 100 Day rally
உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் விடாமல் துரத்தும் பத்திரிகையாளர்கள் மவுன விரதத்தில் அன்புமணி பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையில் உச்சகட்ட பனிப்போர் நடந்து வருகிறது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தமிழகம் முழுதும் 100 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் அன்புமணி. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, ஓசூரில் நடைபயணம் சென்றிருந்தார். நேற்று காலை கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியில், மா விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். தமிழகத்தில், தனி வேளாண் பட்ஜெட் போட அடித்தளம் இட்டவரே பாமக நிறுவனர் ராமதாஸ் தான். திமுக அரசு மா, நெல், கரும்பு விவசாயிகள் உட்பட அனைவருக்கும் துரோகம் செய்தது என்றார். இதற்கிடையே தான் தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தி, குற்றச்சாட்டுகளக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கட்சியினர் அன்புமணியிடம் கூறினர். இதனால் அப்செட் ஆன அன்புமணியிடம் விளக்கம் கேட்க, பத்திரிகையாளர்கள் கங்கலேரியில் திரண்டனர். அவர்களை பார்த்ததும் கட்சியினரிடம் அன்புமணி ஏதோ செய்கை காட்ட, பாமகவினர் அன்புமணி வந்த வாகனம் முன் பிரசார வேனை நிறுத்தி, பிரசார பாடலை போட்டு வாகனத்தை சுற்றிலும் நின்று கொண்டனர். மைக் சத்தம் அதிகமாக இருந்தபோதும் விடாத பத்திரிகையாளர்கள், அன்புமணியிடம் நோட்டீஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். மைக் சத்தம் அதிகமாக இருப்பதால் பிறகு பதில் சொல்கிறேன் எனக் கூறி, அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார் அன்புமணி. பின்னர் ஓசூர், கெலவரப்பள்ளிக்கு சென்ற அன்புமணியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அங்கும் அவர் பதில் அளிக்கவில்லை. உட்கட்சி விவகாரம் பெரிதாகி இருப்பதால் நடைபயணத்தில் இருக்கும் 100 நாட்களும் பேட்டி அளிப்பதில்லை என அன்புமணி முடிவு எடுத்திருக்கிறாராம். அதனால் பத்திரிகையாளர்களிடம் அமைதி காப்பார் என கட்சி நிர்வாகிகள் சிலர் கூறினர்.
ரொம்ப சந்தோஷம்! இந்த மாதிரி எல்லா அரசியல் தலைவர்களும் பேசாமல் இருந்தால் மக்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்! சின்ன மாங்கா மௌனம் தொடரட்டும்! ஒரு சந்தேகம்! இவர் பின்னால் நடந்து செல்ல எங்கே ஆள் பிடிக்கிறார்?