உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சென்னை திமுக கவுன்சிலர் வீடியோ அதிர்ச்சி | Anna university case | Annamalai vs dmk councillor video

சென்னை திமுக கவுன்சிலர் வீடியோ அதிர்ச்சி | Anna university case | Annamalai vs dmk councillor video

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசு மீதும், போலீஸ் மீதும் பாஜ, அதிமுக, தவெக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. கைதானவன் திமுகவை சேர்ந்தவன் என்பதால் சம்பவத்தில் உண்மையை மறைக்க பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இந்த சம்பவத்தில் திமுகவை கண்டித்து தன்னைத்தானே சாட்டையால் அடிக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை செய்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மாணவியை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வைத்து திமுக கவுன்சிலர் கொச்சைப்படுத்தி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு திமுக கவுன்சிலரையும், திமுகவையும் அண்ணாமலை விளாசி உள்ளார்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ