உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்; போட்டுத்தாக்கிய அண்ணாமலை | Annamalai | mk stalin | farmers protest

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்; போட்டுத்தாக்கிய அண்ணாமலை | Annamalai | mk stalin | farmers protest

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் சுரங்கம் அமைக்க கூடாது என எதிர்த்து, விவசாயிகள் பேரணி நடத்தினர். நரசிங்கம்பட்டியில் இருந்து விவசாயிகள் பொதுமக்கள், வாகனங்களிலும் நடைபயணமாகவும் சாரை சாரையாக மதுரை தல்லாகுளம் நோக்கி பேரணி நடத்தினர். இச்சூழலில் டங்ஸ்டன் சுங்கம் விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுக அரசு நாடகம் அடி வருவதாக பாஜ மாநில தலைவர் தாக்கி உள்ளார். அவரது அறிக்கை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரை, திமுக அரசு எந்த எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது. மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ