டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அமைச்சரின் முடிவுக்கு வரவேற்பு | Annamalai | State president
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவு நன்றி சொன்ன அண்ணாமலை மதுரை மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக, மதுரை மாவட்ட மக்கள் சார்பில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில், தங்களின் கோரிக்கையை பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு தமிழக பாஜ சார்பில் நன்றி தெரிவிப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவெடுப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் கிஷன் ரெட்டி விளக்கமளித்ததோடு, அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆய்வு செய்ய, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சுரங்க ஒப்பந்தம் வழங்கிய நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.