உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜ, இந்து அமைப்பினர் கைது | Thiruparankundram | Madurai | Bjp

திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜ, இந்து அமைப்பினர் கைது | Thiruparankundram | Madurai | Bjp

அவுரங்கசீப்பை விட மோசமான திமுக அரசு வதம் செய்யப்படும் வீட்டுச்சிறையில் ஏ.பி.முருகானந்தம் முருகனின் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் விளங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்கா உள்ளது. தர்காவில் கந்தூரி கொடுக்க கடந்த மாதம் ஆடு, சேவலுடன் சென்ற முஸ்லிம்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலையின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில், ஹிந்து அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி திருப்பரங்குன்றம் கோயில் முன் இன்று மாலை போராட்டம் நடத்தப்போவதாக ஹிந்து முன்னணி அறிவித்திருந்தது. அதற்கு, பாஜ மற்றும் ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸ் மறுத்தது. ஆனாலும், தடையை மீறி போராட்டம் நடக்கும் என பாஜ மாநிலதலைவர் அண்ணாமலை மற்றும் ஹிந்து அமைப்பினர் அறிவித்தனர்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி