உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கெஜ்ரிவால் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது ஹரியானா கோர்ட் | Arvind kejriwal | Yamuna river water issu

கெஜ்ரிவால் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது ஹரியானா கோர்ட் | Arvind kejriwal | Yamuna river water issu

ஹரியானாவில் ஆளும் பா.ஜ அரசு, டில்லி குடிநீர் விநியோகத்தில் தடையை ஏற்படுத்த யமுனை நீரில் விஷம் கலப்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும் நீர் பயங்கரவாதம் என்று கூறி தேர்தல் கமிஷன், டில்லி கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கும் கடிதம் எழுதினார். பா.ஜ மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்த இருந்தார். ஆனால் தனது குற்றச்சாட்டுக்கு முதலில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது. இருப்பினும் தனது வாதத்தில் உறுதியாக இருந்த கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்பி ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பொது இடங்களில் யமுனை நீரை குடிக்க முடியுமா என சவால் விடுத்தார். கெஜ்ரிவாலின் சவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பொது வெளியில் யமுனை நீரை கைகளால் அள்ளி பருகினார்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி