உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக, திமுக கவுன்சிலர்கள் சண்டையால் பரபரப்பு; தள்ளுமுள்ளு | Attur Municipality Meeting | Admk Dmk

அதிமுக, திமுக கவுன்சிலர்கள் சண்டையால் பரபரப்பு; தள்ளுமுள்ளு | Attur Municipality Meeting | Admk Dmk

எம்எல்ஏ ஓட்டு கேட்டு வரட்டும் வெளக்குமாறு பிஞ்சிடும் சேலம் நகராட்சியில் களேபரம் சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி திமுக வசம் உள்ளது. தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நகரமன்ற கூட்டம் நடந்தது. அதிமுக வார்டுகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். அப்போது ஆவேசமாக பேசிய திமுக கவுன்சிலர் தங்கவேலு அதிமுக ஆட்சியில்தான் ஆத்தூர் நகராட்சிக்கு எதுவும் செய்யவில்லை; திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஆத்தூர் நகராட்சிக்கு பல திட்டங்கள் கிடைத்துள்ளன என்றார். ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ ஜெயசங்கரனையும் தங்கவேலு கடுமையாக திட்டினார். அறிவு கெட்டவன் என்றும், அடுத்த வருஷம் ஓட்டு கேட்டு வரட்டும் வெளக்குமாத்தால அடிப்போம் எனவும் தங்கவேலு பேசியது அதிமுக கவுன்சிலர்களை கொந்தளிக்க வைத்தது. வார்டு பிரச்னைகளை பற்றி பேசாமல் தனிப்பட்ட நபரை தரக்குறைவாக பேசுவது சரியில்லை என திமுக கவுன்சிலர் தங்கவேலுவை அதிமுக கவுன்சிலர்கள் எச்சரித்தனர். வாக்குவாதம் முற்றியதால் நகரசபையில் கடும் அமளி துமளி நிலவியது. இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைவர் மற்றும் மற்ற திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை