ஷேக் ஹசீனாவுக்கு யூனுஸ் வார்னிங் ஏன்? | Bangladesh violence | Muhammad Yunus | Sheikh Hasina
இந்தியாவில் இருக்கும் வரை...! ஹசீனாவுக்கு யூனுஸ் ஸ்ட்ராங் மெசேஜ் டிஸ்க்: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த மாதம் 5ம் தேதி கலவரம் உச்சத்தை எட்டியதால் பிரதமர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்து தஞ்சம் புகுந்தார், ேஷக் ஹசீனா. அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்தியாவில்அடைக்கலம் புகுந்தபிறகு ஹசீனா ஒரு அறிக்கை வெளியிட்டார். எனக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்; வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத செயல்கள், கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு முகமது யூனுஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.