மத்திய பிரதேசத்துக்கு சென்று அமுக்கியது தனிப்படை Bengaluru PG girl Murder | Bengaluru police
பீகாரை சேர்ந்த 24 வயதான கிருத்திகுமாரி, பெங்களூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ம் தேதி இரவு கிருத்தி அறைக்குள் புகுந்த அபிஷேக், அவரை தரதரவென வெளியே இழுத்து வந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டு தப்பியோடினார். சொந்த ஊரான மத்திய பிரதேசம் போபாலில் பதுங்கியிருந்த அபிஷேக்கை பெங்களூரு தனிப்படை போலீசார் பிடித்தனர். கொலை செய்யப்பட்ட கிருத்திகுமாரியின் முன்னாள் அறை தோழியின் காதலர் தான் அபிஷேக். காதலியை பார்க்க விடுதிக்கு அடிக்கடி வந்துள்ளார். அதனால் கிருத்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலர்களுடன் அவ்வப்போது சண்டை நடக்கும்போதெல்லாம், கிருத்திகுமாரி தலையிட்டு சமாதானம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், அபிஷேக்கை விட்டு பிரியுமாறு, தனது தோழிக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார் கிருத்தி. சில நாட்களில் அபிஷேக் உடன் மனக்கசப்பு ஏற்பட்டு காதலி விலகி சென்றுள்ளார். காதல் முறிவுக்கு கிருத்திதான் காரணம் என நினைத்து, அவரை அபிஷேக் தீர்த்து கட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.