உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உக்ரைன் பயணத்தால் மோடி புகழ் புதிய உச்சம் | Biden praises Modi | Modi ukraine visit | Bangladesh

உக்ரைன் பயணத்தால் மோடி புகழ் புதிய உச்சம் | Biden praises Modi | Modi ukraine visit | Bangladesh

நீங்க சாதிச்சி காட்டிட்டீங்க மோடி இரவோடு இரவாக வந்த போன் கால் புகழ்ந்து தள்ளிய பைடன் போர் பூமியான உக்ரைனுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட அரசு முறை பயணம் வெற்றிகரமாக முடிந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் பாதிப்புகளை மோடி பார்வையிட்டார். உக்ரைன் மக்களுக்கு ஆறுதல் சொன்னார். போரை உடனே நிறுத்த வேண்டும். அமைதியான முறையில் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைன் நாடுகளை மோடி வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் உக்ரைன் பயணமும் போரை முடிவுக்கு கொண்டு வர அவர் எடுத்த முயற்சியும் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவோடு இரவாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் போன் செய்தார். மோடியின் உக்ரைன் பயணத்தை புகழ்ந்து தள்ளினார். அமைதியை நிலை நாட்ட உக்ரைன் சென்று மோடி எடுத்த முயற்சியையும், உக்ரைனுக்கு இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிகளையும் பைடன் பாராட்டினார். தனது உக்ரைன் பயணம் பற்றிய விவரங்களை பைடனிடம் மோடி பகிர்ந்தார். ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தையும் எடுத்து சொன்னார். அமைதியை நிலை நாட்ட இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பைடனுக்கு விளக்கினார். பின்னர் வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து பைடனிடம் பேசிய மோடி வேதனை தெரிவித்தார். அங்கு அமைதியை கொண்டுவர வேண்டியதன் அவசர தேவை பற்றி எடுத்துரைத்தார். வங்கதேசத்தில் மைனாரிட்டி மக்கள் மீது, குறிப்பாக இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் மோடி கவலை தெரிவித்தார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை