ஒயிட் ஹவுசில் டிரம்ப்-பைடன் பேசியது என்ன-பரபர தகவல் Biden-Trump meeting | white house | US Election
கெத்தா என்ட்ரி கொடுத்த டிரம்ப் பரபரப்பான வெள்ளை மாளிகை பைடன்-டிரம்ப் பேசியது என்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். ஜனவரி 20ம் தேதி நடக்கும் விழாவில் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்புக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். பைடனும், டிரம்பும் அதிபரின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது டிரம்புக்கு பைடன் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க தேர்தல், உலக அரசியல், உக்ரைன், இஸ்ரேல் போர் தொடர்பாக 2 பேரும் விவாதித்தனர். குறிப்பாக, உக்ரைன் போர் குறித்து பேசிய பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை ஒரு போதும் விட்டு விடக்கூடாது. அமெரிக்காவின் பாதுகாப்பும் அதில் உள்ளது என்று டிரம்பிடம் சொன்னார். இஸ்ரேல் போர் குறித்தும், ஈரானின் பதிலடி திட்டம் கூறித்தும் அவர்கள் விவாதித்தனர். பைடனின் தோல்வி குறித்து பேசிய டிரம்ப், அரசியல் எப்போதும் கடினமாகவே இருக்கிறது என்றார்.