/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பீஹார் பாணியில் தமிழகத்திலும் தொகுதிகளை அள்ள திட்டம் bihar election | nad victory
பீஹார் பாணியில் தமிழகத்திலும் தொகுதிகளை அள்ள திட்டம் bihar election | nad victory
பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய காரணம் என, எதிர்க்கட்சிகளும் கூறத் துவங்கியுள்ளன. இக்கட்சி, 19 தொகுதிகளில் வென்று, 4.97 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பாஸ்வானை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள நிதிஷ்குமார் மறுத்து விட்டார். 135 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட லோக் ஜன சக்தி, 5.66 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம் 43ல் மட்டுமே வெல்ல முடிந்தது.
நவ 16, 2025