உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவை வந்தார் அமித் ஷா: பாஜவினர் டபுள் ஹேப்பி | BJP | Amit Shah | Amit Shah Coimbatore

கோவை வந்தார் அமித் ஷா: பாஜவினர் டபுள் ஹேப்பி | BJP | Amit Shah | Amit Shah Coimbatore

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா பகுதியில் அமித்ஷா தங்க இருக்கும் தனியார் ஹோட்டல் வரைய சாலையின் இருபுறமும் பாஜ தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதனன்று கோவை மாவட்ட பாஜ அலுவலகத்தை திறந்து வைத்த பின், ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை