உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹரியானாவில் காங்கிரஸ் செய்த 5 சொதப்பல்கள் | BJP | Congress Haryana | Jat focus

ஹரியானாவில் காங்கிரஸ் செய்த 5 சொதப்பல்கள் | BJP | Congress Haryana | Jat focus

ஜூட் விட்ட ஜாட்.. ஹரியானாவில் அதிர்ச்சி திருப்பம் பாஜ ஜெயிக்க காரணமானது காங் ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ல் நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 சதவிகித மக்கள் ஓட்டளித்து இருந்தனர். பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா, ஆசாத் சமாஜ் கட்சிகள் களம் கண்டன. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்த பாஜவை முந்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் இப்போது கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 90 இடங்களில் 50க்கும் மேல் பாஜ முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியை பிடிக்க தேவையான 45 இடங்களுக்கு மேல் பாஜ முன்னிலை இருப்பதால் காங்கிரஸ் தரப்பு கலக்கமடைந்துள்ளது. பஞ்சாபில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்தது கிடையாது. இப்போதைய தேர்தல் முடிவுகள் வரலாற்றை மாற்றி பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. ஹரியானாவில் பாஜ எழுச்சிக்கு காங்கிரஸ் செய்த 5 சொதப்பல்களே காரணமாக சொல்லப்படுகிறது. முதல் காரணம் ஹரியானா காங்கிரஸ் உட்கட்சி பூசல். 2019 ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ