சமூக வலைதளத்தில் மகேஷ் - அண்ணாமலை காரசாரம் | BJP Annamalai | Three language | NEP education
திமுக நடத்தும் பள்ளிகள் முன் இந்த பேனரை வைக்க தயாரா? அமைச்சர் மகேஷுக்கு அண்ணாமலை நறுக் தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என திமுக அரசு சொல்கிறது. மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்கத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என்ற வாதத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கிறார். தேசிய கல்விக்கொள்கை இந்தியை திணிக்கவில்லை; ஆங்கிலம், தமிழ் தவிர ஏதாவது ஒரு மொழியை 3வது மொழியாக படிக்கலாம் என பாஜ கூறி வருகிறது. அரசு பள்ளிகளில் மட்டும்தான் இரு மொழிக் கொள்கை; திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறதே? அது எதற்காக என அண்ணாமலை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். அதற்கு திமுக தரப்பிலோ அதன் கூட்டணி கட்சிகளோ விளக்கம் அளித்ததாக தெரியவில்லை. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷின் மகனே தமிழுக்கு பதில் பிரெஞ்ச் படித்ததை அண்ணாமலை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறார். ஏழைகளின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் இரு மொழியா? எனவும் அண்ணாமலை கேட்கிறார். இந்நிலையில், சென்னையின் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனரை அமைச்சர் மகேஷ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? என அந்த பேனரில் வாசகம் இடம்பெற்றுள்ளது.. அந்த பதிவை டேக் செய்து அண்ணாமலை சுருக்கமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். செம்மொழி இருக்க பிரெஞ்சு மொழி எதற்கு? என மகேைஷ அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். நீங்கள் ஏன் இந்த பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் வைக்கக்கூடாது? அவர்கள் நடத்தும் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சமா? எனவும் அமைச்சர் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி விடுத்துள்ளார்.