/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாகர்கோவில் எம்எல்ஏவை தள்ளிவைக்கும் பாஜ; சாதகமாக பயன்படுத்த அதிமுக முடிவு | BJP MLA | Gandhi | ADM
நாகர்கோவில் எம்எல்ஏவை தள்ளிவைக்கும் பாஜ; சாதகமாக பயன்படுத்த அதிமுக முடிவு | BJP MLA | Gandhi | ADM
நாகர்கோவில் பாஜ எம்எல்ஏ காந்தியை ஓரம் கட்டுவதற்கு கட்சியில் தீவிர முயற்சி நடக்கிறது. மீண்டும் எம்எல்ஏ சீட் பெற அவர் டில்லி சென்றும் பயனில்லை என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில் சட்டசபை தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருப்பவர் காந்தி. இவர், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்தார். 80 வயதாகும் காந்தி, வரும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். ஆனால், வயது முதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக புதுமுகத்தை களமிறக்க தமிழக பாஜ தீவிரம் காட்டுகிறது #admk #bjp #nagarcoil #nagerkovilconsituency #Gandhi #BJPMLA #sureshrajan #admkallince
மார் 22, 2026