அனைத்து கிளைக்கும் நிர்வாகிகளை நியமிக்க உத்தரவு! | BJP Tamilnadu | Core Committee Meeting | ADMK
அதிமுகவை யாரும் விமர்சிக்காதீங்க! மைய குழு கூட்டத்தில் பாஜ வலியுறுத்தல் தமிழக பா.ஜ மாநில மைய குழு கூட்டம், சென்னை கமலாலயத்தில் நடந்தது. இதில் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியில் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதை, பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூட்டத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லப்பட்டது. இது தொடர்பாக, கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியது தொடர்பாகவும் ஞாபகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.வை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.