சந்திரபாபு நாயுடு மீது ஒய்எஸ்ஆர் காங் பகிரங்க குற்றச்சாட்டு | Midhun reddy arrest | Andhra Politics
வீட்டு காவலில் எம்பி ஆந்திராவில் பரபரப்பு ஆந்திராவில் லோக்சபா, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் அடிக்கடி மோதிக் கொண்டனர். சில இடங்களில் வன்முறை ஏற்படுமளவுக்கு மோதல்கள் நடந்தன. சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்ததும் மோதல் இன்னும் அதிகமானது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த ராஜம்பேட்டை லோக்சபா எம்பி மிதுன் ரெட்டி கூறினார். ராஜம்பேட்டையில் உள்ள ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, வட்ட செயலர்கள் உள்ளிட்டோரை மிரட்டி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைக்கும் முயற்சி நடப்பதாக மிதுன் குற்றம்சாட்டினார்.