உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவையில் இடிந்த வீடுகள்; கண்ணீர் விட்ட பெண்கள் | Coimbatore | Houses Collapsed | Vanathi Srinivas

கோவையில் இடிந்த வீடுகள்; கண்ணீர் விட்ட பெண்கள் | Coimbatore | Houses Collapsed | Vanathi Srinivas

இடிஞ்ச வீடுகளை பார்க்க வரல மேயருக்கு வேற என்ன வேலை? வானதி ஆவேசம் பெண்கள் கண்ணீர் கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணி நடக்கிறது. அதேநேரத்தில் ஓடையை ஒட்டி சாலை அமைக்கும் பணியும் நடக்கிறது. சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் அஸ்திவாரம் வலுவிழந்து ஒரு மாடி வீடு, 2 ஓட்டு வீடுகள் அடுத்தடுத்து சரிந்து ஓடையில் விழுந்தன. விரிசல் ஏற்படும்போதே வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் இல்லை. ஓடையில் விழுந்த வீடுகளை பார்வையிட்ட கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை