உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மும்முரம்! | Congress | DMK | MKStalin

கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மும்முரம்! | Congress | DMK | MKStalin

காமராஜரா? கருணாநிதியா? செக் வைத்த ஸ்டாலின்! காமராஜர் பெயரில் இயங்கி வந்த திருத்தணி காய்கறி சந்தைக்கு, கருணாநிதி பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. தமாகா, பாமக, நாதக போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், துரை சந்திரசேகர் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரத்தை முன்வைத்து, திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவும், செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் ஸ்டாலினிடம் நெருக்கடி ஏற்படுத்தவும் திட்டமிட்டனர். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த உளவுத்துறை, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றது. காமராஜர் பெயரிலேயே தொடர்ந்து சந்தை இயங்கும் என ஸ்டாலின் அறிவித்தார். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் திட்டத்துக்கு ஸ்டாலின் செக் வைத்து விட்டதாக செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: காங்கிரசில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக செயல்படும் சில கோஷ்டி தலைவர்கள் அதிமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றனர். இதுபோன்ற சிறு பிரச்னைகளை ஊதி பெரிதாக்கி கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கின்றனர். அதற்காகவே திட்டமிட்டு சில காரியங்களை செய்துள்ளனர். அப்படியொரு காரியம் தான் திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்றக் கூடாது என கொடி பிடித்தது. இதை அறிந்ததும் சுதாரித்த முதல்வர், திருத்தணி சந்தை காமராஜர் பெயரிலேயே இயங்கும் என அறிவித்து விட்டார். செல்வப்பெருந்தகைக்கு எதிர்ப்பான காங்கிரசார், அடுத்து ஏதாவது விஷயத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கப் பார்ப்பர் என கூறினர்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை