மிரள வைக்கும் கோவை மாநகராட்சியின் கணக்கு | Coimbatore Corporation | Vellalore
டீ செலவுக்கு ₹27 லட்சம் மாஸ்க் வாங்க ₹2 லட்சம் கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முழுவதும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கே குப்பை தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுகிறது. அளவுக்கு அதிகமான குப்பைகள் சேருவதால் குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 6 முதல் 17 வரை ஒரு வாரத்துக்கும் மேல் குப்பை கிடங்கில் தீ எரிந்தது. கட்டுகடங்காமல் எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு துறை, மாநகராட்சி ஊழியர்கள் போராடினார். தீயணைப்பு வாகனங்கள், மாநகராட்சி தண்ணீர் லாரி, ஜேசிபி, பொக்லைன், தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு வாரத்துக்கும் மேல் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது தீ பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள உரம் தயாரிக்கும் பகுதி தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது.