உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அரசின் அராஜகம்: அண்ணாமலை கண்டனம் | Cuddalore BJP Protest | PM modi | Annamalai Bjp | DMK Govt

திமுக அரசின் அராஜகம்: அண்ணாமலை கண்டனம் | Cuddalore BJP Protest | PM modi | Annamalai Bjp | DMK Govt

மோடி உருவ பொம்மை எரிப்பு பாஜவினர் குண்டுகட்டாக கைது அண்ணாமலை ஆவேசம் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சியினர், பிரதமர் மோடி, அமித்ஷா உருவ பொம்மையை எரித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மமகவினரை கைது செய்யக் கோரி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். போராடிய பாஜவினரை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எஸ்.பி. ஜெயக்குமார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். திடீரென பாஜவினர் கடலூர் - பாண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் போலீசார் 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவின் உருவ பொம்மையை எரிக்க ஒருவர் முயன்றார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி உருவப் படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் தமிழழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜவினர் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் கொடுக்க ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதைத்தொடர்ந்து பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பாஜவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: லால்பேட்டையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி என்ற பிரிவினைவாத கும்பல், பிரதமர் மோடியின் உருவப் படத்தை எரித்திருக்கிறது. ஆனால், இது வரை, தமிழக காவல்துறை, இந்தக் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கடலூர் மேற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரைக் கைது செய்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கை, வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிகளுக்கு ஆதரவாக இதற்கு மேல் செயல்படமுடியாது என்ற ரீதியில், தமிழக காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, பிரதமர் உருவப்படத்தை எரித்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும், இல்லையேல், ஏற்படும் பின்விளைவுகளுக்குத் திமுக அரசின் காவல்துறையே பொறுப்பு என் எச்சரிக்கிறேன் என அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை