/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய பாஜ | DMK | BJP | Tamilnadu | Womens Safety
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய பாஜ | DMK | BJP | Tamilnadu | Womens Safety
அன்று சார்; இன்று கார் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு! கேள்வி எழுப்பும் பாஜ! அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் இ.சி.ஆர். சாலையில் காரில் பெண்களை துரத்திச் சென்ற சம்பவங்களை மையப்படுத்தி, அன்று சார், இன்று கார்; தி.மு.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என தமிழக பா.ஜ. கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பா.ஜ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில், தி.மு.க.வை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன், சார் என்று ஒரு நபரை குறிப்பிட்டு உள்ளார்.
ஜன 31, 2025