உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எலக்சனுக்கு முன்னால் என்ன செய்யப்போகிறது திமுக? | DMK | Election Donation | 2026 Election

எலக்சனுக்கு முன்னால் என்ன செய்யப்போகிறது திமுக? | DMK | Election Donation | 2026 Election

கட்சி வளர்ச்சி, தேர்தல் செலவுக்காக அரசியல் கட்சிகள் மக்கள், நிறுவனம், தொழிலதிபர்களிடமிருந்து நிதி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்காக நிதி வசூலிக்க களம் இறங்கியுள்ளது திமுக. கடைசியாக 2016ல் தேர்தல் செலவுக்கு நிதி வசூலித்த திமுக 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வசூல் வேட்டையை ஆரம்பிக்கிறது. இதற்காக மாவட்டச் செயலர்கள், ஒன்றியம், பகுதி, வட்டம், கவுன்சிலர் என பதவிக்கு ஏற்ப வசூல் இலக்கு கட்சி தலைமையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கு என்ன இலக்கு என்பது குறித்து மாவட்டம் வாரியாக நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் அறிவிக்க உள்ளனர். மாவட்டம் தோறும் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம் கூட்ட தலைமையிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை