திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி | DMK Meeting | Beer party
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் 2 நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான வசந்தம் கார்த்திகேயன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் தலைவாழை இலை போட்டு நிர்வாகிகளுக்கு கூலிங் பீர் உடன் அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதுதொடர்பான போட்டோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்முடி ராஜினாமா செய்த அதே நாளில் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு உற்சாகமாக அசைவ விருந்து வைக்கப்பட்டதாக மற்றொரு விமர்சனமும் எழுந்தது. போதையின் பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தும் திமுக தலைவரின் கட்சி கூட்டத்திலேயே வெளிப்படையாக பீருடன் விருந்து வழங்கியது சர்ச்சையானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரசு வழக்கறிஞரும் திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியுமான ரஞ்சித் ஆடியோ வெளியாகி உள்ளது.