உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிரம்ப் இந்துக்கள் ஓட்டை வேட்டையாடிய ஸ்டைல் | Donald Trump won | US hindus vote | Trump hindu tweet

டிரம்ப் இந்துக்கள் ஓட்டை வேட்டையாடிய ஸ்டைல் | Donald Trump won | US hindus vote | Trump hindu tweet

இந்துக்கள் ஓட்டை அள்ளியது யார் டிரம்ப் செய்த மிகப்பெரிய மேஜிக் US-ல் நடந்தது இதுதான் உலகமே உற்று நோக்கிய அமெரிக்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 2வது முறை அதிபர் ஆகிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவு அமெரிக்க தேர்தலில் இந்த முறை இந்தியர்கள் ஆதிக்கம் பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக இந்துக்களின் ஓட்டை வேட்டையாட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இடையே பெரிய கோதாவே நடந்தது. கமலா ஓர் இந்து பெண். இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். அதுவும் தமிழக பின்னணி கொண்டவர். இருப்பினும் இந்துக்கள் ஓட்டை அறுவடை செய்வதில் டிரம்ப் முந்தி விட்டார் என்கிறது கள நிலவரம். இந்த மேஜிக்கை அவர் எப்படி நிகழ்த்தி காட்டினார் என்பதை பார்க்கலாம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 52 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் தான் 2வது இடத்தில் உள்ளனர்.

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி