டிரம்ப் வென்றதும் தீயாய் பரவும் பழைய வீடியோக்கள் | Trump won | Modi-Trump friendship | Viral video
மோடி-டிரம்ப் செய்தது என்ன? தீயாய் பரவும் பழைய வீடியோ டாப்-3 இவை தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம் உலக அரசியலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் சக்தி கொண்டது. இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே உறுதியான நட்புறவு உள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் மறுபிரவேசம் செய்ய இருப்பது இந்தியாவுடனான நட்பில் எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி அரசியல் நிபுணர்கள் அலசி எடுக்க ஆரம்பித்து விட்டனர். முந்தைய தேர்தல் பிரசாரங்களை காட்டிலும் இந்த முறை இந்துக்கள், இந்தியர்களுக்காக டிரம்ப் அழுத்தமாக பேசி இருக்கிறார். எனவே டிரம்ப் அதிபர் ஆவது இந்தியாவுக்கு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுவது மோடி, டிரம்ப் நட்பு பற்றி தான்.