பிரதமரிடம் பேசியது? எழுந்த சர்ச்சைக்கு நீதிபதி விளக்கம் | Chief Justice | PM | DYChandrachud
விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் வந்தது ஏன்? நீதிபதி சந்திரசூட் விளக்கம் விநாயகர் சதுர்த்தி அன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனை அரசியலாக்கிய சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களை அரசியல்வாதிகள் எப்படி சந்திக்கலாம் என கேள்வி எழுப்பின. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக டில்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்தார். இது போன்ற சந்திப்புகளில் நீதித்துறை தொடர்பான கருத்துக்கள் ஒருபோதும் பகிரப்படாது. பிரதமர் என் இல்லத்துக்கு வந்த போது நிர்வாக ரீதியிலான எந்த விஷயமும் விவாதிக்கப்படவில்லை. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை தலைவர்கள் சந்திப்பு வழக்கமான ஒன்று தான். இதில் எழுப்பப்படும் ஆட்சேபனைகள் தேவையற்றது மற்றும் நியாயமற்றது.