உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பள்ளிகளுக்கான நிதி ஒதுக்குவதில் தாமதம்! | EB Bill | School | Education Minister Magesh

பள்ளிகளுக்கான நிதி ஒதுக்குவதில் தாமதம்! | EB Bill | School | Education Minister Magesh

சொந்த செலவில் பள்ளி EB பில் தலைமையாசிரியர்கள் புலம்பல்! அரசு பள்ளிகளின் ஸ்டேஷனரி பொருட்கள், மின்கட்டணம் உள்ளிட்ட சில்லரை செலவுகளுக்கு, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் 2 தவணையாக 50,000 ரூபாய் வரை அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும். செலவு விபரத்தை ஆண்டு தோறும் மார்ச் இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலங்களில் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் கட்டினர். பிப்ரவரியில் நிதி கிடைத்தால் தான் மார்ச் இறுதிக்குள் அதற்கான செலவு தொடர்பான பில்களை தாக்கல் செய்ய முடியும். ஆனால் மார்ச் மாதமாகியும் இதுவரை நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. சென்ற நிதியாண்டிற்கு முதல் தவணை நிதி மட்டுமே பள்ளிகளுக்கு கிடைத்தது. நிதி ஆண்டு முடியும் நிலையிலும் இந்தாண்டு பணம் விடுவிக்கப்படவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் 10,000 முதல் 60,000 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தியுள்ளனர். தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான மின் கட்டணம், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் சார்பில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஆனால் 9,000க்கும் மேற்பட்ட அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியரே பணம் செலுத்தி அதை அரசிமிடருந்து திரும்ப பெறும் நடைமுறை உள்ளது. ஆசிரியர்கள் வலியுறுத்தியதன் எதிரொலியாக, மின்கட்டணத்தை அரசே செலுத்தும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பல மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ