/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இஸ்ரேல் கையில் சிரியா? பகீர் தகவல் Israel vs Syria | Golan Heights | Bashar Al Assad | syria rebels
இஸ்ரேல் கையில் சிரியா? பகீர் தகவல் Israel vs Syria | Golan Heights | Bashar Al Assad | syria rebels
சிரியாவில் நடக்கும் உள் நாட்டு போரின் முக்கிய திருப்பமாக, தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். 54 ஆண்டுகளாக நடந்து வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். புதிய அரசாங்கத்தை கிளர்ச்சி படை நிறுவப்போகிறது. அடுத்த அதிபர் யார் என்று விரைவில் தெரிந்து விடும். இந்த பரபரப்புக்கு ஊடே அதிபர் ஆசாத் தப்பி ஓடியதை இஸ்ரேலும் அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே பாலஸ்தீன், லெபனானுடன் பஞ்சாயத்தை இழுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கும், சிரியா உள் நாட்டு போருக்கும் அப்படி என்ன சம்மந்தம் என்று கேள்வி எழக்கூடும்.
டிச 09, 2024