/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாக்டரை குத்தியது ஏன்? அதிர வைத்த இளைஞன் | guindy doctor case | chennai doctor attack | Dr Balaji
டாக்டரை குத்தியது ஏன்? அதிர வைத்த இளைஞன் | guindy doctor case | chennai doctor attack | Dr Balaji
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் மூத்த டாக்டராக இருப்பவர் பாலாஜி ஜெகநாதன். இன்று மருத்துவமனையில் இருந்த டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞன் சரமாரியாக கத்தியால் குத்தினான். தலை, கழுத்து, மார்பு என 7 இடங்களில் டாக்டருக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஐசியுவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கொடூர சம்பவத்துக்கு பிறகு கத்தியுடன் சர்வ சாதாரணமாக விக்னேஷ் சென்றான். அவனை காவலாளிகள், மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவன் கிண்டி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டான். அவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நவ 13, 2024