பழங்குடியின தலைவரை நீக்குவதா? அசாம் முதல்வர் கண்டனம் | Jharkhand | Jharkhand CM | JMM | Hemant
முதல்வராகிறார் ஹேமந்த்? சம்பய் சோரன் அதிருப்தி! ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை ஜனவரியில் கைது செய்தது. ராஞ்சியில் 8 ஏக்கர் நிலத்தை பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது. கைதை தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார். 5 மாதங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த சூழலில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் சம்பய் சோரன் வீட்டில் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். சம்பய் சோரன் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி விலகும் சம்பய் சோரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.