/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்து முன்னணி மாநில தலைவருக்கு மிரட்டலா? | Hindu Munnani | Bjp | kadeswara subramaniam
இந்து முன்னணி மாநில தலைவருக்கு மிரட்டலா? | Hindu Munnani | Bjp | kadeswara subramaniam
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதை போலீஸ் அதிகாரிகள் மறைக்க முயன்றுள்ளனர் என அதன் மாநில பொதுசெயலர் கிஷோர்குமார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவரது அறிக்கை: சில நாட்களுக்கு முன் பழனியிலுள்ள பாஜ அலுவலகத்துக்கு ஒரு தபால் வந்தது. அதில் சிலர் பயங்கரவாத பயிற்சி எடுப்பதாகவும், முஸ்லிம் அமைப்பை சேர்ந்த பத்து பேருக்கு பயிற்சி கொடுத்து காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீஸ் அதிகாரிகள், உண்மையை மறைக்க முயன்றுள்ளனர்.
ஆக 16, 2024