புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் மோடி பெருமிதம் International Renewable energy summit | Modi
1000 ஆண்டு இலக்கை நோக்கிய பாதையில் இந்தியா குஜராத்தின் காந்திநகரில் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இதில், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கான மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் அது சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்து பேசியதாவது: இன்றைய சூழலில் மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்துள்ளது. நம்மிடம் நிலக்கரியோ, கச்சா எண்ணெயோ போதுமான அளவு இல்லை. அதனால், சூரிய சக்தி, அணு உலைகள் , நீர் மின் நிலையங்கள், காற்றாலைகளை பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெற வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இந்த துறையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. 21ம் நுாற்றாண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இந்தியா திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.