ஹமாஸ், ஹெஸ்புலா கதை அவ்ளோ தான்? | Iran vs Israel | Hamas Hezbollah Houthi | Ayatollah Ali Khamenei
கைவிரித்தார் கமெனி ஹமாஸ்-ஹெஸ்புலா-ஹவுதி தலையில் ஈரான் இறக்கிய இடி மத்திய கிழக்கில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் தங்கள் ஆசியுடன் கிளர்ச்சி படைகளை வளர்ப்பது ஈரானுக்கு கை வந்த கலை. அப்படி தான் காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா, ஏமனில் ஹவுதி, சிரியா, ஈராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என்று அண்டை நாடுகளில் ஈரானுக்கு பினாமி படைகள் உண்டு. இந்த கிளர்ச்சி படைகளுக்கு பணம், ஆயுதம் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்து தங்கள் செயல் திட்டங்களுக்கு ஈரான் பயன்படுத்தி வருகிறது. இப்படி ஹமாஸ், ஹவுதி, ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளை பாலூற்றி வளர்த்து வரும் ஈரான் இப்போது திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளது.