உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேல் மீண்டும் போரில் குதித்த பகீர் பின்னணி | Israel Hamas war resume | Gaza issue | US | Trump

இஸ்ரேல் மீண்டும் போரில் குதித்த பகீர் பின்னணி | Israel Hamas war resume | Gaza issue | US | Trump

காசாவில் மீண்டும் வெடித்த போர் உள்ளே இறங்கி அடித்த இஸ்ரேல் கொத்தாக போன 342 உயிர் பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி காசாவில் ஹமாசுக்கு எதிராக மீண்டும் இஸ்ரேல் போரில் குதித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரவோடு இரவாக முதல் நாள் நடத்திய கொடூர தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நடக்கிறது. 2023 அக்டோபர் 7ம் தேதி முழு நீள போர் வெடித்தது. அன்று யூதர்களுக்கு புனித நாள். இஸ்ரேலின் பல இடங்களில் இசை கச்சேரி நடந்தது. காசா எல்லையை ஒட்டிய பகுதிகளில் நடந்த கச்சேரியில் ஆயுதங்களுடன் கொத்து கொத்தாக ஹமாஸ் பயங்கரவாதிகள் புகுந்தனர். குருவி சுடுவது போல் கூட்டத்தினரை சுட்டுத்தள்ளினர். அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும் பிணைக்கைதிகளை மீட்கவும் மறு கணமே இஸ்ரேல் போரை துவங்கியது.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !