இஸ்ரேலை இந்தியா ஆதரிக்க 3 முக்கிய காரணம் | Israel vs Hamas | why India supports Israel | Jaishankar
இஸ்ரேலை இந்தியா ஆதரிப்பது ஏன்? பின்னால் இருக்கும் 3 ரகசியங்கள்! ஜெய்சங்கர் உடைத்த உண்மை மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்., 7ல் போர் துவங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து 1136 பேரை ஹமாஸ் கொலை செய்ததால் இந்த போர் வெடித்தது. காசா, மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே இருந்த பிரச்னை, இப்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பிரச்னையாக மாறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக, பார்லிமென்ட்டில் எதிர்கட்சி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. ஐ.நா., பொது சபையில், இஸ்ரேல்-காசா போர் தொடர்பான தீர்மானங்களில், இந்தியா ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது ஏன் என்று கேட்டு இருந்தனர்.