இஸ்ரேலுக்கு எதிராக திரண்ட 124 நாடுகள்-பரபரப்பு தகவல் Israel vs Palestinian | Hamas | India on Israel
இன்னும் 12 மாசம் தான் டைம் இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்ட கெடு இந்தியா எடுத்த முடிவு இதுதான் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. பதினொன்றரை மாதங்களை தாண்டியும் போர் நிறுத்தம் வரவில்லை. இந்த நிலையில், பாலஸ்தீன் எல்லைக்குள் இஸ்ரேல் சட்டவிரோதமாக இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாலஸ்தீன் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் மீது புதன்கிழமை ஓட்டெடுப்பு நடந்தது. 124 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் பாலஸ்தீன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. ஐநா பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இஸ்ரேலுக்கு ஒரு வருடம் கெடு விதித்துள்ளது. அதற்குள் பாலஸ்தீனில் இருந்து முழுமையாக அனைத்து வகையான இஸ்ரேல் அமைப்புகளும் வெளியேற வேண்டும். இதை சர்வதேச நீதிமன்றமும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. பாலஸ்தீனில் இஸ்ரேல் புகுந்து சண்டை செய்து வருவது சட்ட விரோதம். அந்த நாட்டில் இருந்து வேகமாக இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று உத்தரவு போட்டு இருந்தது. இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பாலஸ்தீன் தீர்மானத்தில் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன.