உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை | JK Election Vote Counting | Haryana Election Counting

2 மாநிலங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை | JK Election Vote Counting | Haryana Election Counting

காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிப்பது யார்? ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதே போல் ஹரியானாவில் 90 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கும் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 மாநிலங்களில் பதிவாகிய ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, 2 மாநிலங்களிலும் முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள் செய்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை