/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கள்ளக்குறிச்சியில் சாலையில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்! Kallakurichi | DMK | ambulance stuck
கள்ளக்குறிச்சியில் சாலையில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்! Kallakurichi | DMK | ambulance stuck
மத்திய பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றனர். திமுக ஆர்ப்பாட்டத்துக்காக, கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை 2 மணி நேரம் அடைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்தும், திமுகவினர் கலைந்து செல்லாமல், சாலையை ஆக்கிரமித்தனர். அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் கூட்டத்தில் சிக்கி தவித்தது.
ஜூலை 27, 2024