உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஞ்சிபுரம் மாநகராட்சியில் என்ன நடக்கிறது? | Kanchipuram Mayor | Dinamalar

காஞ்சிபுரம் மாநகராட்சியில் என்ன நடக்கிறது? | Kanchipuram Mayor | Dinamalar

திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மனத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இச்சூழலில் கவுன்சிலர்கள் பெரும்பாலானவர்கள் ஊட்டி, குற்றாலம் என டூர் கிளம்பி சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் தவிர 50 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் 12 பேர் மேயருக்கு ஆதரவாக உள்ளனர். 22 திமுக கவுன்சிலர்கள் உட்பட 38 பேர் எதிராக உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற 80 சதவீத ஆதரவு, அதாவது 40 பேர் தேவை. இந்நிலையில் ஆதரவு கவுன்சிலர்கள் 12 பேர் ஏற்கனவே குற்றாலம், ஊட்டிக்கு டூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் அதிருப்தி கோஷ்டியினரும் தங்களது அணியை தக்கவைத்துக்கொள்ள குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை