கிளம்பிய திடீர் சர்ச்சை; இஸ்ரேல் முற்றுப்புள்ளி | Israel India Map | kashmir | Pakistan
இந்தியாவின் கோரிக்கை ஏற்ற இஸ்ரேல் உடனே அறிவிப்பு வெளியிட்டது தூதரகம் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறி வைத்து தூக்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளும் ஈரான் ஆதரவில் இயங்கி வருபவை. ஹமாஸ், ஹிஸ்புல்லா மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல், ஈரான் நாடுகளிடையேயான போர் 3வது உலகப்போராக மாறிவிடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த போர் பரவலாம் என்கிற பதற்றம் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான விவகாரங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஐ.நா சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவை இஸ்ரேலின் ஆசிர்வதம் என்றார். உலக வரைபடத்தை கையில் வைத்திருந்த அவர் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் இஸ்ரேலின் சாபம் என்றார். எகிப்து, சூடான், சவுதி அரேபியா, மற்றும் இந்தியாவை ஆசிர்வதிக்கப்பட்டவை என குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு இஸ்ரேல் இணையதளத்தில் இஸ்ரேலின் நட்பு நாடுகள் குறித்து பதிவேற்றப்பட்டது.