ஆம்ஆத்மியை கெஜ்ரிவால் ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: பிரசாந்த் பூஷன்! Kejriwal | Prashant Bushan
சாதாரண மனிதர்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீல் பிரசாந்த் பூஷன், சமூகவியலாளரும், கல்வியாளருமான யோகேந்திர யாதவ் போன்றவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சி தான் ஆம் ஆத்மி. அதில் ஒருவராக முக்கிய தளகர்த்தராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன் என்பது பொருள். சாதாரண மனிதர்களுக்கான கட்சியை அதே பெயரில் ஆரம்பித்த பின் 2013ல் டில்லிக்கு சட்ட சபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலை சந்தித்தது. 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது ஆம்ஆத்மி.