உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுப்ரீம் கோர்ட்டில் முறையிட நடிகருக்கு அவகாசம் | actor S Ve Shekher| high court shekher case

சுப்ரீம் கோர்ட்டில் முறையிட நடிகருக்கு அவகாசம் | actor S Ve Shekher| high court shekher case

நடிகர் எஸ்வி சேகர், கடந்த 2018ல் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை, தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக, அவருக்கு எதிராக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை சிறப்பு கோர்ட் விசாரித்தது. நடிகர் எஸ்வி சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. சிறப்பு கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார் எஸ்வி சேகர். மறு உத்தரவு வரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் இடைக்கால தடை போட்டது. கடந்த முறை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்வி சேகரின் வக்கீல் வாதிட்டார். சமூக வலைதளத்தில் தவறுதலாக கருத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவை நீக்கியதுடன், உடனே மன்னிப்பும் கேட்டுள்ளார். சாட்சிகள் விசாரணை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். அப்போது நீதிபதி வேல்முருகன், எந்த பதிவு வந்தாலும் படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? என கேட்டார். படிக்காமல் பகிர்ந்ததாக கூறினால், பின் எதற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள் எனfறும் கேள்வி எழுப்பி இருந்தார். சிறப்பு கோர்ட்டில் இருந்து ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை