உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BJP கூட்டணியின் சூப்பர் ஹிட் வெற்றி ரகசியம் | maharashtra election result | NDA vs INDI Alliance

BJP கூட்டணியின் சூப்பர் ஹிட் வெற்றி ரகசியம் | maharashtra election result | NDA vs INDI Alliance

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ, சிவ சேனா ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு அடங்கிய என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மதியம் ஒரு மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இந்த கூட்டணி 216 இடங்களில் முன்னிலை வகித்தது. தேர்தல் கருத்து கணிப்புகளையும் தாண்டி என்டிஏ கூட்டணி இமாலய வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் Ladki Bahin Yojana லாட்கி பஹின் யோஜனா. செல்ல சகோதரி திட்டம். மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பு என்டிஏ கூட்டணி அரசு துவங்கிய இந்த திட்டம் தான் இப்போது கேம் சேஞ்சராக மாறி இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றியை உறுதி செய்த மகளிர் உரிமை தொகை திட்டம் மாதிரி தான் இதுவும். பெண்களுக்கு சில வரையறை அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதே போல் Ladki Bahin Yojana என்ற பெயரில் மகாராஷ்டிராவில் தகுதியான பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்க ஆரம்பித்தது என்டிஏ கூட்டணி அரசு. இரண்டரை கோடி பெண்கள் வரை இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற துவங்கினர்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி