உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாஜி எம்எல்ஏ மனைவிக்கு நேர்ந்த சோக முடிவு

மாஜி எம்எல்ஏ மனைவிக்கு நேர்ந்த சோக முடிவு

மணிப்பூரின் சைகுல் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ யாம்தோங் ஹாக்கிப் Yamthong Haokip. 2012, 2017ல் என, 2 முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர். 2022 சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜவுக்கு தாவினார். இவரது மனைவி சாருபாலா. வயது 59. இவர் நேற்று வீட்டு வாசலில் இருந்த குப்பைகளுக்கு தீ வைத்து எரித்தார். குப்பைகளுக்கு நடுவே இருந்த ஒரு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அங்கு நின்று கொண்டிருந்த சாருபாலா குண்டுவெடித்ததில் காயமடைந்தார். மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அவர் இறந்தார்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !