மோடி கேட்ட உடன் OK சொன்ன டிரம்ப் | Modi Trump meets | Mumbai attack | Tahawwur Rana | 26 11 attack
இழுத்து வரப்படுகிறான் தஹாவூர் உசேன் ஒயிட் ஹவுசில் மோடி அடித்த சிக்ஸ் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆன பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்ற மோடி அடித்த முதல் சிக்சர் தஹாவூர் உசேன் ராணா. இந்தியாவின் வான்டட் லிஸ்ட்டில் இருக்கும் மிகக்கொடிய பயங்கரவாதி இவன். அமெரிக்க சிறையில் இருக்கும் இவனை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று உடனடியாக ஒப்புதல் அளித்தார் டிரம்ப். இது இந்தியாவின் சட்டப்போராட்டம், மோடியின் ராஜதந்திர பேச்சுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தஹாவூர் உசேன் ராணா யார், அவன் அப்படி என்ன செய்தான் என்பதை தெரிந்துகொண்டால், அவனை நாடு கடத்த கிடைத்திருக்கும் அனுமதி எவ்வளவு பெரிய வெற்றி என்பது புரியும். இந்தியா பார்த்த மிகக்கொடிய தாக்குதலில் ஒன்று மும்பை அட்டாக். 2008 நவம்பரில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேரை நம் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு அவன் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியது. இவர்களுக்கு முழு ஆதரவை வழங்கியது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ. ஸ்பாட்டுக்கு வந்தது 10 பேர் தான் என்றாலும், இவர்களுக்கு பின்னால் இருந்து திட்டத்தை வகுத்து கொடுத்த முக்கிய பயங்கரவாதிகள், திட்டத்துக்கு துணை போனவர்கள் என பலருக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் தஹாவூர் உசேன் ராணா மற்றும் தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லி. இவர்கள் 2 பேரும் இப்போது அமெரிக்க சிறையில் உள்ளனர். நெங்கிய நண்பர்கள். உசேன் ராணா கனடா வாழ் பாகிஸ்தானி. தாவூத் கிலானி பாகிஸ்தான் தந்தைக்கு பிறந்த அமெரிக்க குடிமகன். மும்பை தாக்குதலை முடித்த கையோடு அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் போட்ட போது 2 பேரையும் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்த பத்திரிகை முகமது நபிகளின் கார்டூன் படத்தை வெளியிட்டு இருந்தது. இதனால் அதன் அலுவலகத்தை தகர்க்க திட்டமிட்டு இருந்தனர். இதற்கிடையே தான் மும்பை தாக்குதலில் 2 பேருக்கும் தொடர்பு இருப்பதை நம் என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர். அமெரிக்காவுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தாவூத் கிலானி அப்ரூவர் ஆகி விட்டான். அவன் தான் உசேன் ராணாவுக்கு மும்பை அட்டாக்கில் இருக்கும் தொடர்பையும் சொன்னான். நாங்கள் 2 பேரும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் இருந்தோம். நாங்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்டதும் உண்மை தான். 2007, 2008 ஆண்டுகளில் 5 முறை மும்பை வந்தேன். தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் தொடர்பாக உளவு பார்த்து லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு சொன்னேன். எனக்கு எல்லா வகையிலும் உதவியது எனது நண்பன் தஹாவூர் ராணா தான். அவன் தான் பொருளுதவி, பண உதவி செய்தான். நான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அடைக்கலம் தந்ததும் அவன் தான் என்று தாவூத் கிலானி ஒப்புக்கொண்டான். தஹாவூர் உசேன் ராணா பற்றியும் திடுக் தகவல்களை அவன் சொன்னான். தஹாவூர் ராணா அடிப்படையில் ஒரு டாக்டர். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்தான். அவனுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் அப்போதே நெருங்கிய நட்பு இருந்தது. லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாதிகளுடனும் உறவை வளர்த்தான். பின்னர் கனடாவில் செட்டில் ஆகி, அங்கேயே குடியுரிமை பெற்றுக்கொண்டான். கனடா சென்ற பிறகு பிசினஸ்மேன் ஆனான். உண்மையில் அவன் தொழில் அதிபர் போர்வையில் ஒளிந்திருந்த பயங்கரவாதி. அவனுக்கு லஷ்கர் இ தொய்பா கொடுத்த முக்கிய அசைன்மென்ட் தான் மும்பை அட்டாக். தாக்குதலுக்கு தேவையான எல்லா தகவல்களை திரட்டி தரும்படி அவனிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி அவன் தனது மனைவியுடன் மும்பை வந்தான். தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தான். ஓட்டலின் அனைத்து இடங்களையும் உளவு பார்த்தான். தாக்குதல் நடத்த வேண்டிய மற்ற இடங்கள் பற்றியும் தகவல் திரட்டினான். எல்லாவற்றையும் லஷ்கர் இ தொய்பாவுக்கு அனுப்பி வைத்தான். அதன் அடிப்படையில் தான் பயங்கரவாதிகள் மும்பை தாஜ் ஓட்டலை தாக்கினர். அதுமட்டும் அல்ல தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் தான் பயிற்சி பெற்றனர். அவர்கள் தங்குவதற்கு, பயிற்சி பெறுவதற்கு தேவையான இட வசதியையும் தஹாவூர் உசேன் ராணா தான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறான் என்று அவனது நண்பவ் தாவூத் கிலானி சொன்னான். அதன் பிறகு தான் தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் வேலையில் இந்தியா இறங்கியது. கைதிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே உள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தஹாவூர் உசேன் ராணா அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுத்தான். கீழ் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை அனைத்து இடங்களிலும் அவனது மனு தள்ளுபடி ஆனது. இனி எங்கும் முறையிட முடியாது என்று கடந்த மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் அவனை உடனடியாக நாடு கடத்த மோடி கோரிக்கை வைத்தார். அதை ஏற்று உடனே ஒப்புதல் வழங்கி உள்ளார் டிரம்ப்.