/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்க அதிகாரிகள் கிடுக்கிப்பிடி | M.P Kathir anand | DMK | ED
திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் அமலாக்க அதிகாரிகள் கிடுக்கிப்பிடி | M.P Kathir anand | DMK | ED
திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்க உள்ளதாக புகார் எழுந்தது. அப்போது நடந்த ரெய்டில் துரைமுருகனின் வலது கரமான பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் வேலுாரில் உள்ள சிமென்ட் கிடங்கில், 11.51கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்தப்பணம் கதிர் ஆனந்துக்கு சொந்தமானது என தெரிந்தது. இதனடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ஜன 23, 2025